கருவறைக்குள்ளேயே…
புறச்சூழலின் அதிர்வுகளை
புரிந்துணர்ந்தேன்.
என்னைச் சுமந்தவள்
ஏக சக்திகளை இழந்திருந்தாள்
என்னைக்காக்கும் பொருட்டு.
என்னை பெற்றெடுக்க
ஒரு காட்டு மரம்
நிழல் தந்தது!.
தாக்குதல் அத்தனையிலும்
என்னைக்காக்கவே
எல்லா நாளும் போராடினாள்
அம்மா.
“அம்மா”
என்று அழைத்தப்பின்னும்,
“அம்மா”
என்பதைக் கேட்டப்பின்னும்
நிகழ்த்தப்பட்டிருந்தால்…
நிறைவை தந்திருக்கும்,
எங்கள் மரணம்.
இது,
நீங்கள்
இரங்க வடித்தக் கவிதையல்ல.
நான்,
இறந்து வடித்தக் கண்ணீர்.
( ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009. சிறிலங்கா படையினர் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் எறிகணைகள், ஆட்லறி எறிகணைகள், கனோன் ரக பீரங்கிகள் மற்றும் பல்குழல் ரொக்கட் லோஞ்சர் ஆகிய கனரக நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் மாண்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில்…இந்த அழகிய மழலையும் அடக்கம்)
7 பின்னூட்டங்கள்
Comments feed for this article
மே 13, 2009 இல் 3:04 முப
nellaitamil.com
இது,
நீங்கள்
இரங்க வடித்தக் கவிதையல்ல.
நான்,
இறந்து வடித்தக் கண்ணீர்
பரிதாபப்படுவதை தவிர எங்களால் என்ன செய்யமுடியும்
மே 13, 2009 இல் 10:54 முப
சித்தன்
எண்ணங்கள் ஓட்டாக மாறனும். நேர்மை அரசாளனும்.தர்மம் வெல்லனும்.
மே 13, 2009 இல் 11:26 முப
குளோபன்
……………………………..
……………………………..
……………………………..
……………………………..
……………………………..
(என் மெளனத்தைப் பதிவு செய்வதைத் தவிர வேறொன்றும் இயலாத இயலாதவனின் பின்னூட்டம்)
மே 13, 2009 இல் 11:42 முப
சித்தன்
ஈழ துயர்க்கண்டும்
எதுவும் செய்யாத
“உலகின் மெளனம்” கூட
ஒருவகை வன்முறைதான்.
உங்களின் எண்ணத்தை
உலகிற்கு சொல்லுங்கள்
அதுதான் நன்முறை.
பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி.
ஜூன் 2, 2009 இல் 6:27 முப
kumaracme
People of Tamil Eelam are smart, talented and resourceful. You shall rise again from your ashes. By ballots or bullets, Tamil Eelam shall become a reality so long as you keep up your hopes and dreams alive. – Shexmus Amed
ஜூன் 2, 2009 இல் 6:28 முப
kumaracme
Dear Sittan
for tamil fonts how to download.
Kindly guide me. I am having couple
of poems on our tamileelam to post
Kumar
ஜூன் 2, 2009 இல் 12:25 பிப
சித்தன்
go to suratha.com than select puthuvai (unicode tamil writer). if you write in enlish it convert to tamil. Eg you write “anbudan’ – it will come அன்புடன். then you copy and paste where you want.
thanks.