
மரணக்குழிகள் 1346
மகிந்தாவின் கூட்டுப்படை
மண்ணில் ஆயிரமாயிரம்
மரணக்குழிகளை வெட்டியதாம்,
அங்கே அடர்த்தியாய்
வாழ்ந்த தமிழினத்தை
வன்முறையால் வதைத்ததாம்!
பின்,
கொன்றும் கொல்லாமலும்
குழிக்குள் தள்ளிப் புதைத்ததாம்!!
இதை,
தொழிற்நுட்பம்
நிழற்ப்படமாய் சாட்சிச் சொல்லுது!
அதை இலங்கையின்
அரசினபேடிகள் மறைத்துச் செல்லுது!!
அப்”பாவிகள்” கொன்றது
அப்பாவிகளை என்ற
உண்மை ஒருநாள் வெளியாகும்!
அடே மகிந்தா
அன்றே உன் தலை தனியாகும்!!
மகிந்தா உன் வெற்றியை
நாளைய…
வரலாறு பழித்துச் சொல்லும்!
அன்று,
எம் மாவீரர் எண்ணம் தான்
அந்த…மண்ணில் வெல்லும்.
(இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில், 7000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அதை விட மிகப் பெரிய அளவில், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளதாக ஆம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.
இந்த நிலையில், வன்னிப் போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவில் உள்ள சவக்குழிகளின் சாட்டிலைட் படங்களை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று பெரிய சவக்குழிகள் இதில் காணப்படுகின்றன. ஆனால் மொத்தம் 1346 சவக்குழிகள் இருப்பதாக ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.)

6 பின்னூட்டங்கள்
இந்த ஆக்கத்திற்கான மறுமொழி ஓடை
ஆகஸ்ட் 14, 2009 இல் 9:37 மு.பகல்
ஹேமா
சித்தன் மனம் சலிப்படைகிறது.இனி இதையெல்லாம் கண்டு பிடித்து என்ன ஆகப்போகிறது.ஏற்கனவே சாட்சியங்களோடு கண்டதற்கெல்லாம் ஒரு நீதியான பதில் கிடைத்ததா எங்கள் நாட்டில்.கண்டு பிடிக்கும் வெளிநாடுகளுக்கு அரசு செய்யும் அநீதியையும் தட்டிக்கேட்கும் தைரியம் வேணும்.எல்லாம் சும்மா போங்கள்.அவன் தன்பாட்டில் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு தான் நினைத்த கொள்கையோடு போய்க்கொண்டே இருக்கிறான்.தமிழனின் நிலை…?
ஆகஸ்ட் 14, 2009 இல் 12:51 பிற்பகல்
சித்தன்
ஹேமா, உங்களின் கருத்துக்கு திரு மாசிலன் பதில் எழுதியுள்ளார் (கவனிக்க) என்னுடைய எண்ணமும் அதுதான். வருகைக்கும்…கருத்துரைக்கும் மிக்க நன்றி.
ஆகஸ்ட் 14, 2009 இல் 10:33 மு.பகல்
மாசிலன்
ஹேமா : //இனி இதையெல்லாம் கண்டு பிடித்து என்ன ஆகப்போகிறது?//
செய்த அநியாய அட்டூழுயங்களை வெளிச்சம் போட்டு உலகுக்கு காட்டி விளக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இரண்டாம் உலகப் போரில் மறைந்த பல இலட்ச யூத மக்களின் பாவங்களை இன்றும் சுமந்து வரும் ஜெர்மானியர்கள், ஆப்ரிக்க கண்டத்தில் கருப்பிணத்தவர்களை அடிமை படுத்தி கொடுமை செய்த வெள்ளையர்களின் பாவத்தை இன்றும் சுமந்து வருகிற இப்போதைய வெள்ளையர் சமுதாயம் போல் மகிந்த இராணுவத்தின் பாவங்களை இனி வருகிற சிங்கள தலைமுறைகள் கட்டாயம் சுமக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இக்கொடுமைகளின் பாவச் சுமைகளினால் அவனது முழு சிங்கள இன வெறி மக்களும் வெட்கத்தில் கூனி குறுகி அழிய வேண்டும். இதுவே குறி.
எனவே இமி அளவும் மனம் தளராமல் எதிலும் வேகம் குறையாமல் எந்த வித சோக வலையிலும் வீழ்ந்து விடாமல் தொடர்ந்து வீரியத்துடன் நியாயத்திற்கும் நீதிக்கும் போராடுவோம்.
நன்றி.
ஆகஸ்ட் 14, 2009 இல் 12:59 பிற்பகல்
சித்தன்
மாசிலன்… உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. மற்றும் என் நிலையில் ஹேமாவிற்கு மடல் எழுதிய விதமும் நன்று. நன்றி.
மே 8, 2010 இல் 11:21 மு.பகல்
mkumar
vaarthaigal vara marukkudhada… Iraivaa yean intha kodumai….?????
ஜூன் 10, 2010 இல் 1:38 மு.பகல்
சித்தன்
காலதாமதத்திற்கு வருந்துகிறேன்…… தங்களின் உணர்வுக்கு மிக்க நன்றி.